தமிழ் சினிமாவில் இருந்த நடிகைகளிலேயே தெனிந்திய நடிகையாக ஒரு காலத்தில் ஜொலித்து வந்த நடிகை குஷ்பூ இப்போது சினிமாவில் அதிகமாக பங்கு பெறாமல் இருந்து வருகிறார். அப்படி அந்த காலத்திலேயே எந்த ஒரு தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு ரசிகர் கூட்டம் குஷ்பூவிற்கு இருந்தது. 80 காலங்களிலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தினை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. 1980களில் தனது தமிழ் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர். ஆரம்பித்த சில வருடங்களிலேயே பெரிய ரசிகர் கூட்டத்தை தன பக்கம் ஈர்த்தார்.
அப்படி அவர் பிசியான நடிகையாக வளம் வந்து கொண்டு இருந்த நேரத்திலேயே தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஒரு நடிகையாக இருந்து வந்தார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் பல மொழிகளில் அசத்திய நடிகையாக இருந்து என பல மொழி திரைப் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்துள்ளார். . குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டினார்கள் அவரின் ரசிகர்கள். தற்போது இவர் சின்னத்திரை,வெள்ளித்திரை என துறைகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் சினிமாவினை அடுத்து சீரியலில் கூட நடிக்க ஆரம்பித்து இருந்தார். இப்போது அதனையும் தாண்டி அரசியலிலும் களமிறங்கினார். இப்போது அரசியலில் ஒரு பக்கமாக வைத்து விட்டு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்தை ரசிகர்கள் பார்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்போது அவர் சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி தனது ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வந்தார். அதனி அடுத்து அவரின் மகளின் போட்டோ ஒன்று வெளியாகி அதே போல இப்போது வைரலாகி இருக்கின்றது. அம்மாவை போல படுகுண்டாக இருந்து வந்த அவரின் மகள் இப்போது சில மாதங்களிலேயே இப்படி மாறிஇருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.