தமிழ் சினிமாவில் இருந்து இதுவரை ஆஸ்கார் வரை சென்று இருக்கும் ஒரே பிரபலம் என்ற புகழினை பல வருடமாக தன்வசம் வைத்து இருக்கின்றார். அவரின் புகழினை பற்றி பலருக்கும் தெரியும் அவரின் சினிமா வாழ்க்கை பற்றியுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் தனிப்பட்ட வாழ்கையை பற்றி யாருக்குமே அதிகமாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
இப்போது சினிமாவிலேயே அதிக பிசியாக இருந்து வரும் ஒரு இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இப்போது கைவசம் மட்டும் 20 படங்களுக்கு மேலாக ஒரே நேரத்தில் இசையமைத்து வருகின்றார். சமீபத்தில் இவரின் மகள் குறித்த ஒரு செயல் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக விமர்சனம் செய்யபட்டு இருக்கிறது
சில மாதங்களுக்கு முன்பு ரஹ்மான் ஆஸ்கார் வென்ற படமான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் பத்தாவது ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் மேடையில் ஏறிய போது புர்கா அணிந்துகொண்டே மேடையேறியது பெரும் விமர்சன பொருளாக மாறி இருந்தது. துரதிர்ஷ்டவசமாக இதில் சிலர் இளையராஜாவின் பெயரையும் இ.ழு.த்.து. விட்டிருந்தார்கள்.
மேலும் பலருமே அது அவரின் நம்பிக்கை மற்றும் ஆடை அவரின் விருப்பம். அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது. என்று பலருமே கருத்துகளை செய்து வந்தனர். இப்போது மீண்டும் அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு போட்டோவில் அவர் அதே போல புர்கா அணிந்து கொண்டே தான் போஸ் கொடுத்து இருக்கின்றார்
இந்த புகைப்படம் பல ரசிகர்கள் மத்தியில் பல லட்சம் லைக்குகளை பெற்று வருகின்றது. இந்த போட்டோவினை பலருமே பகிர்ந்து சமூக வலைதள பக்கத்தில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். மேலும் ரஹ்மானின் மகள்கள் மற்றும் அவரின் மகனுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவினை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர்.