இதை ஒரு ஸ்பூன் குடுங்க போதும்… சளிப்பிரச்சனை, வறட்டு இருமல் பறந்துடும்…!

ஆரோக்கியம்

பனிக்காலமும் சளிப் பிரச்னையும் இரட்டைக் குழந்தைகளைப் போல! அதிலும் குழந்தைகளுக்கு சளிப் பிரச்னை, வறட்டு இருமல் ஆகியவை படுத்தும்பாடு வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதற்காக அலோபதி மருத்துவரைத் தேடி ஓடுவதும், அவர் கண்ட, கண்ட ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதும் வாடிக்கை.

சில குழந்தைகளுக்கு பனிக் காலத்தில் சளியின் உக்கிரத்தால் தொடர்ச்சியாக ஆவி பிடிப்பதும் வழக்கம். ஆனால் இதையெல்லாம் விட குழந்தைகளின் சளிப் பிரச்னையை இயற்கை முறையிலேயே தீர்த்துவிட முடியும். அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முதலில் ஒரு தூய்மையான பவுல் அல்லது கின்னத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது ஒரு ஸ்பூன் தேனை ஊற்ற வேண்டும். பொதுவாகவே தேனுக்கு பல மருத்துவகுணங்கள் உண்டு. நம் உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மையும் அதற்கு உண்டு. சளி பிடித்த குழந்தைக்கு தொடர்ந்து தேனைக் கொடுக்கும் போது உடலில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். தொண்டை கரகரப்பு, தொண்டை புண்களை குணப்படுத்தும் வல்லமையும் தேனுக்கு உண்டு.

கின்னத்தில் ஊற்றி வைத்திருக்கும் ஒரு ஸ்பூன் தேனோடு கால் சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இந்த ஏலக்காய் பொடியை மிக்சியில் அரைத்த பின், குழந்தைகளுக்கு கொடுப்பது என்பதால் சலித்து விட்டுத்தான் சேர்க்க வேண்டும். இப்போது தேனையும், ஏலக்காய் பொடியையும் நன்றாகக் கலக்க வேண்டும். இப்போது இந்த கலவையை ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் இதைச் சாப்பிட்ட பத்து நிமிடங்களுக்கு பின்னர் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தேன் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் தேனில் இருக்கும் மருத்துவ குணங்கள் தொண்டையில் தங்காமல் உடனே உடலில் போய் சேர்ந்துவிடும். அப்படி தங்கினால் தான் தேன் தொண்டை கரகரப்பை நீக்கும். ஏலக்காய் சளியைக் கரைத்து வெளியேற்றும். இந்த பத்து நிமிடங்களில் என்ன செய்யலாம் தெரியுமா? நம் எச்சிலை அதிகமாக விழுங்கலாம். அதிலும் ஏராளமான நோய் எதிர்ப்புத்தன்மை இருக்கிறது.

ஏலக்காய்க்கு பசியைத் தூண்டும் தன்மையும் உண்டு. குழந்தைகளுக்கு தினசரி இதை மூன்றுமுறை கூட கொடுக்கலாம். இருமல் அதிகமாக இருந்தால் ஐந்து முறை கூட கொடுக்கலாம்.

செய்முறை வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது,பார்த்து பயனடையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.