காகத்திற்கு சாப்பாடு வைப்பவரா நீங்கள்? அப்படினா உங்களுக்குத் தான் இந்தப் பதிவு..அதன் ந ன்மை, தீ மைகள் தெரியுமா?

ஆன்மிகம்

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.

காகம் மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழக் கூடியது. அதனால் தான் நாமும் அடிக்கடி காகத்திற்கு உணவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். காகம் சனீஸ்வர பகவானின் வாகனம். கூடவே இந்துமத சாஸ்திரப்படி எமலோகத்தின் வாசலில் இருந்து எமதூதுவனாகவும் காகம் செயல்பட்ம் என்பது ஐதீகம். அதனால் தான் அமாவாசை, திதி நாள்களில் காகத்திற்கு உணவு வைக்கிறோம். தினமும் காகத்திற்கு உணவிடுவது அதைவிட நல்லது. அதேபோல் உங்கள் பக்கத்தில் காகமே அன்று இல்லாவிட்டால் என்ன செய்யலாம்? தாராளமாக வேறு விலங்கிற்கோ, பறவைக்கோ உணவிடலாம்.

பொதுவாகவே எமதர்மர் காகத்தின் மேல் வந்து தான் பூலோகம் சுற்றுவாராம். அவரது வாகனமான காகத்திற்கு உணவிடுவதால் எமன் மகிழ்வார். காக்கைக்கு உணவிட்டால் எந்த தீமையும் இல்லை. மாறாக எமதர்ம ராஜா மற்றும் சனீஸ்வரனின் பூரண ஆசிகிட்டும்.

Leave a Reply

Your email address will not be published.