இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.
உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு. மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது.
அறிகுறிகளை வைத்து நாம் கண்டு கொள்ள முடியும் என்றாலும் பலரும் அதனை பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை. பின்னர் நோய் முற்றியவுடன் தான் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோம். பொதுவாக இது எளிதான காரியம் அல்ல. இது மிகவும் கடினமானது. ஆனால் சரியான வாழ்க்கை முறை, உணவுகள் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம்.
அதிலும் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு கவனமாக இல்லாவிட்டால், நீரிழிவு நோயானது முற்றிவிடும்.சரி, இப்போது அந்த இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில செயல்களைப் பார்ப்போம்.