எலும்பு மு றிவு அல்லது எலும்பு உடைவது என்பது எலும்பியல் சிக்கல்களில் பொதுவான ஒன்றாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் 6.3 மில்லியன் மக்கள் எலும்பு மு றிவால் பா திக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு பெண், ஐந்தில் ஒரு ஆண் உலகம் முழுவதும் இந்த பி ரச்சனையை அவர்கள் வாழ்நாளில் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
எலும்பு மு றிவு என்பது இயல்பாகவே தீர்க்கப்படும் ஒரு பி ரச்சனையாக இருந்தாலும், சில எளிய வீட்டுத் தீர்வுகள் மூலம் மேலும் எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்க முடியும். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.
எலும்பில் உண்டாகும் வி ரிசல் தான் எலும்பு மு றிவு என்று அறியப்படுகிறது. எலும்பு மு றிவுகளின் பெரும் சதவிகிதம் மிகப்பெரிய அழுத்தம் அல்லது சக்தி மிகுந்த தாக்கத்தின் விளைவாகும். சில நபர்களுக்கு எ லும்புப்புரை , புற்றுநோ ய், முறையற்ற எ லும்பாக்கம் போ ற பாதிப்புகளால் எலும்பு முறிவு உண்டாகலாம். எலும்பு முறிவு ஏற்பட பல்வே று வழிகள் உண்டு. எலும்பில் ஏற்பட்ட முறிவின் காரணமாக அதன் அருகில் மற்றும் சுற்றியுள்ள தி சுக்களில் எந்த ஒரு சே தமும் ஏற்படாமல் இருந்தால் அது மூ டு மு றிவு ஆகும். எலும்பை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் அது தி றப்பு முறிவு அல்லது கூட்டு மு றிவாகும்.
ஆக, எத்தனை விதமான எலும்பு மு றிவுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் மற்றவற்றில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.