மறக்க முடியுமா? ஆயிரம் கிலோ மீன் 200 கிலோ இறால் 50 கிலோ கோழி…! மருமகனுக்கு ஆடி சீர் கொடுத்து அசத்திய மாமனார்…!! வியக்கவைத்த புகைப்படங்கள்..

செய்திகள்

இந்தியாவில் ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், , 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என வாயை பிளக்கும் சீர் செய்து மருமகனை அசத்தியுள்ளார் ஒரு மாமனார்.

தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதை போல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் / ஜூலை மாதங்களில்),”பொனாலு”என்கிற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடுகிறார்கள்.புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஆந்திராவின் அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.

தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்ச்சி அடைந்து ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், , 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள்என வண்டி வண்டியாக மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இனிப்பு,காரம்,சத்துள்ள உலர்பழங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், அசைவங்களான ஆடு, கோழி, மீன் மற்றும் கடல் உயிரினங்கள்,மளிகை பொருட்கள் என வாரி வழங்கியுள்ளோம் என மகிழ்ச்சி பொங்க பலராம கிருஷ்ணா கூறியுள்ளார்.

இதனை உள்ளூர்வாசிகள் கண்டு ஆச்சரியப்பட்டனர். தங்களது மகளை மிகவும் அன்புடன் மருமகன் கவனித்து வருவதால் எங்கள் அன்பை காட்டும் விதமாக சீர் செய்துள்ளோம்.

இனிப்பு,காரம்,சத்துள்ள உலர்பழங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், அசைவங்களான ஆடு, கோழி, மீன் மற்றும் கடல் உயிரினங்கள்,மளிகை பொருட்கள் என வாரி வழங்கியுள்ளோம் என மகிழ்ச்சி பொங்க பலராம கிருஷ்ணா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.