ஏங்க, இந்த பழம் எங்க கிடைச்சாலும் தேடி வாங்கி சாப்பிடுங்க…! ஏராளமான நன்மைகள் இருக்காம்

ஆரோக்கியம்

உலகளவில் சீனாவில் அதிகம் விளைவிக்கப்படும் பிளம்ஸ் பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன…வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகிய சத்துகளும், வைட்டமின் பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் வைட்டமின் இ சத்துகளும் நிறைந்துள்ளன.

இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டதுடன், கொழுப்பை கரைக்கிறது…இந்த பிளம்ஸ் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு செரிமான உறுப்புகள் அனைத்தும் சீராகி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது…

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி கொண்டது, போலிக் அமிலம் அதிகம் நிறைந்த இப்பழத்தை கர்ப்பிணி பெண்கள் தாராளமாக சாப்பிடலாம்…இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்பெறும், உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றும் சக்தி பிளம்ஸ்க்கு உண்டு…

மனப்பதற்றம், மன அழுத்தம் கொண்டவர்கள் தொடர்ச்சியாக பிளம்ஸ் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காண முடியும் என ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது…

Leave a Reply

Your email address will not be published.