நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்பதை பெரிதாக யாரும் உணரவில்லை.பெ ப்ஸி, கோ க் என செ யற்கை குளிர்பானங்களைக் குடிப்பதைவிட இளநீர், பதநீர் மாதிரியான இயற்கை பானங்களில் சத்து அதிகம்.ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இளநீரின் பெருமைகள் தெரிவதில்லை.
இளநீர் குளிர்ச்சி என்பது நம் அனைவருக்கும் தெரியும். பொதுவாகவே உடல் சூடு அடையும் நேரங்களில் நாம் இளநீர் பருகுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். இளநீரில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் உள்ளன. இதில் கலோரி மிகக்குறைவான அளவிலேயே உள்ளது. இளநீரைப் பொறுத்தவரை அது இயற்கை பானம் என்பதால் அப்படியே பருகுவதுதான் உடலுக்கு நல்லது.
அப்படி இல்லாத பட்சத்தில் வேறு பழச்சாறுகளுடன் சேர்த்துக் குடிக்கலாம். எக்காரணம் கொண்டும் வேறு செயற்கை சுவையூட்டிகளை இதில் சேர்க்கக் கூடாது. இளநீரை மட்டும் குடிக்காமல் அதன் உள்ளே இருக்கும் வழுக்கை என்படும் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் நல்ல சத்து கிடைக்கும். கூடவே இப்படி சாப்பிடும் போது இது உடலில் இரத்தத்தில் இருக்கும் குளுகோஸையும் கட்டுப்படுத்தும்.
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் இளநீரை நம்ஊர்களில் அப்படியே சந்தைக்கு கொண்டுவருவார்கள். அதை அரிவாளால் சீவி விற்பனை செய்வார்கள். ஆனால் இங்கே வெளிநாட்டில் அதை வித்தியாசமாக விற்பனை செய்து அசத்துகிறார்கள். அப்படி என்ன செய்கிறார்கள் எனக் கேட்கிறீர்களா?
இளநீரை நன்கு சீவி அழகுபடுத்துகிறார்கள். தொடர்ந்து அந்த இளநீரை கண்ணைக் கவரும் வகையில் பேக்கிங் செய்து அசத்துகிறார்கள். இப்படியாக சந்தைக்குவரும் பாரம்பர்யப் பொருளை பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள். அப்புறம், இளநீரை எப்படி விக்கிறாங்க சாமர்த்தியமாக என ஆச்சயப்பட்டுப் போவீர்கள்.