ஏழை மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் செலவில் 16 செல்போன்களை வழங்கிய ஆசிரியர்…! இவருடைய மனசு எத்தனை பேருக்கு வரும்.! அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்னுதாரணம் ..!

செய்திகள்

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில வழியில் 16 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் கிராமத்தில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படததால். ஆன்லைன் வகுப்பு தொடங்கி நடந்து வருகிறது.இந்த நிலையில் 16 மாணவர்களிடமும் செல்போன் இல்லாத காரணத்தால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களின் ஆர்வத்தை தெரிந்து கொண்ட அந்த பள்ளியின் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியர் பைரவி என்பவர் மாணவர்கள் சிரமத்தை போக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதன்படி தன்னிடம் பயிலும் 16 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ஒரு லட்சம் மதிப்புள்ள 16 செல்போனை வாங்கி தந்ததோடு சிம் கார்டு மற்றும் ரீசார்ஜ் செய்துள்ளார்.

இதை அவர்கள் ஒரு உதவியாக செய்யவில்லை சேவையாக கருதுவதாகவும் ஆசிரியர் பைரவி கூறியுள்ளார். மேலும் 25 மாணவர்களுக்கு செல்போன் வாங்கித் தர முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இனி வரும் தங்கள் பள்ளிகளில் பத்தாம் வகுப்புசேரும் மாணவர்களுக்கும் இலவசமாக செல்போனை வாங்கி தர உள்ளதாகவும் அதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஆன்லைனில் வகுப்பில் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்கு பெற்று வரும் மாணவர்கள் கணித ஆசிரியை பைரவிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலரிடம் அதை செயல்படுத்திக் காட்டிய ஆசிரியர் பைரவி பல ஆசிரியர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறார். இவரைப் போன்று பலரும் முடிந்த அளவு உதவி செய்தால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் போட்டிப்போட முடியும் என்பது மிகையாகாது .

Leave a Reply

Your email address will not be published.