அவதார் கெ ட்டப்பில் நடிகர் மாதவன்.!அப்போ அடுத்த படத்தில்.?? அவரே வெளியிட்ட வீ டியோ,குஷியில் ரசிகர்கள்.!

திரையரங்கம்

90 காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்றால் நடிகர் மாதவன் தான். இன்று வரை இவருக்கு பெண்களின் ரசிகைகள் மட்டுமே அதிகம்.
சமீபத்தில் நடிகர் மாதவன் மனைவி சரிதாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில், “என் அன்பே, உன் வாழ்நாள் முழுவதும் உன்னை பிரகாசமாக சிரிக்க வைப்பேன் என நம்புகிறேன். நமது நன்மைக்காகவும் நீ, நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.

ஏனா நீ இல்லாம எங்களுக்கு ரொம்ப கஷ்டம்.. நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரிதா..!” என்று குறிப்பிட்டுட்டார்.சரிதா மாதவனின் காதல் கதைநடிகர் மாதவனின் இயற்பெயர் மாதவன் பாலாஜி ரங்கநாதன். இவர் ஜூன் மாதம் 1ஆம் திகதி 1970 ஜாம்சத்பபூர் மாநிலம் பீகாரில் பிறந்தார். அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இந்த படத்தில் நடிக்கும் போதே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

அதன் பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த மாதவன் ஆக்ஷ்ன் படங்களில் நடிக்க விருப்பப்பட்டு லிங்குசாமியின் “ரன்” மற்றும் சீமானின் “தம்பி” படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த “விக்ரம் வேதா” மாபெரும் வெற்றியை பெற்றது.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் மாதவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவதார் கெட்டப்பில் காணொளி வெளியிட்டுள்ளார்.அதில் அவர் ” அவதாரில் நானும் ஒரு பார்ட் ” என கூறியுள்ளார்.குறித்த காணொளி சமூக வலைதளங்களில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.குறித்த காணொளியை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

Leave a Reply

Your email address will not be published.