இ ற ந் த தன் மனைவியின் 30 வது நாளை தத்ரூபமாக சிலையாக வடிவமைத்துள்ளார் மதுரையை சேர்ந்தவர்.மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன். தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதையடுத்து, தனது மனைவி தன்னை தனியே தவிக்கவிட்டு சென்றாலும் என்றும் தன்னுடன் இருக்கவேண்டும் என்று, மனைவி மீது உள்ள பாசத்தினால் சேதுராமன் தனது மனைவி பிச்சைமணி அம்மாளின் உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்.
இதனால், தனது வீட்டில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரைக் கொண்டு பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் என்றும் நிரந்தரமாக இருக்கும் வகையில், தனது மனைவியை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
மேலும். பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாளை ஒட்டி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட மனைவியின் சிலையை வைத்து வழிபாடு செய்தார் சேதுராமன். பிச்சைமணி அம்மாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் அவர்களின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.