தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமாணவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் இந்தி நடிகையாக தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி போன்ற மொழிகளில் பிஸி நடிகையாக காலக்கட்டத்தில் பிரபலமானார் நடிகை சமீரா. வாரணம் ஆயிரம் படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பு தமிழில் அஜித்தின் அசல், விஷாலின் வெடி, ஆர்யா-மாதவனின் வேட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு அக்ஷை என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தையை பார்த்து வந்த சமீரா சினிமாவிற்கு எண்ட்கார்ட் போட்டார். அவருக்கும் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மனைவி ஜடாவிக்கு ஏற்பட்ட alopecia totalis என்ற நோய் எனக்கு இருந்து என்று ஒரு பதிவில் கூறியுள்ளார். கூந்தல் செல்களை அந்த நோய் தாக்கி முடி உதிர்வை உண்டாக்கும். அப்படி எனக்கு இரண்டு அங்குல வழுக்கையை கண்டறிந்தேன்.
அடுத்தடுத்து இது தொடர அலோபீசியா நோயை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்காக சிகிச்சை மேற்கொண்டேன். இந்நோயால் முற்றிலும் சரியாகும் என்ற தீர்பு இல்லை. ஆனால் எனக்கு அது சரியானது. இந்த முடி உதிர்வு மீண்டும் எனக்கு வரலாம் என்று கூறியுள்ளார் சமீரா ரெட்டி.
மேலும் ஏற்கனவே பல பாடி ஷேமிங் விஷயத்தில் சமீரா எதிர்கொண்டவர். குழந்தை பிறந்து சில மாதங்களில் உடல் எடை அதிகரித்தது தான் அதற்கு காரணம். அதன்பின் சமீரா கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து தற்போது மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளார்.
View this post on Instagram