திரையுலகில் பிரபல தொலைக்காட்சி சேனலில் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்யாவிற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக அறிமுகமான நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய 18 பேர் இளம் பெண்கள் போட்டி போட்டு அவரை ஈர்க்க வேண்டும் என்ற நிகழ்ச்சி தான் அது. அதில் நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் அபர்ணிதி என்ற பெண் ஆர்யா மீது தீராத அன்பு வைத்திருந்தார்.
மேலும் அவரால் இறுதி சுற்றுக்கு வர முடியவில்லை. நிகழ்ச்சியில் மக்கள் பெரியளவில் ஈர்க்கபப்ட்ட அபர்ணா இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகினார்.முதல் படம் ஓரளவிற்கு ஓடிய நிலையில் அபர்ணா தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ஒரு கண்டீஷன் போடுகிறாராம். சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களாக இருந்தால் சம்பளம் 1 கோடியளவில் கொடுக்க வேண்டும் என்றும் அதை விட இளம் நடிகர்களாக இருந்தால் சம்பளத்தை அதற்கேற்ப குறைத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
இப்படி ஒரே ஒரு படம் நடித்து அந்த படம் சரியாக ஓடல அதுக்குள்ள இந்தம்மா கண்டீஷன் போடுதே என்று தயாரிப்பாளர்கள் வேற நடிகையை தேடி செல்கிறார்களாம்.