தமிழ் சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் வளம் வந்தவர் சினேகன். மேலும் இவர் ஆட்டோகிராப் போன்ற படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி மக்கள் மனதை ஈர்த்து வந்தார். இதையடுத்து மார்க்கெட் இல்லாத நேரத்தில் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ டாக்டர் என்ற பெயரையும் பெற்று இறுதி சுற்று வரை சென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் உறுப்பினராக இவர் பணியாற்றி வந்தார். எப்போது திருமணம் என்ற கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பல ஆண்டுகளாக காதலித்து வந்த உறவினர் பெண்ணும் சீரியல் நடிகையுமான கன்னிகா ரவியை கமல்ஹாசன் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் திருமணம் நடைபெற்று சில மாதங்களில் சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு சென்றார். கணவர் இல்லாததால் கன்னிகா போட்டோஷூட் அவுட்டிங் என நாட்களை கழித்து வந்தார். இந்நிலையில் கன்னிகாவின் கூந்தல் பெரியளவில் அழகாக இருப்பதை தற்போது வெட்டியுள்ளார். வெட்டியதுடன் பார்ப்பதற்கு ஆணாகவே மாறியது போல் தோற்றமளித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
it’s not a original hairstyle#kannikaravi pic.twitter.com/hhySAiaWzo
— கன்னிகா சினேகன் @Kannika snekan (@KannikaRavi) March 30, 2022