தமிழ் சினிமாவில் 90 களில் நாயகிகளாக வலம் வந்த பலரும் இப்போது சீரியல்களின் சீரியஸான ரோல்களை நடித்து வருகின்றனர். வெள்ளித்திரையில் ரசிக்கப்பட்ட பலரும் தங்கள் ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க சின்னத்திரையில் வருவதுண்டு.
ராதிகா முதல் ரம்யா கிருஷ்ணன் வரை இந்த பட்டியலும் மிக நீண்டதே. அந்த வகையில் இப்போது விஜய் டிவியில் ஔிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நாச்சியார் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை சபிதா ஆனந்த். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
பிறகு நாயகியின் தங்கை ரோலுக்கும் தயாராகினார். மேலும் பல படங்களில் நாயகியாகவும் நடித்த சபிதா ஆனந்த் மலையாளத்தில் மற்றும் 100க்கும் மேற்பட்ட படங்களை நடித்தவர் தமிழில் தலைவாசல் மாயி உட்பட சில படங்களில் நடித்தள்ளார். அப்போது சபிதா ஆனந்தின் புகைப்படங்களுக்கும் இப்போது இருக்கும் நாச்சியார் கேரக்டருக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது போல இருந்தாலும் தனது நடிபை தமிழ் சினிமாபை கொண்டு கலக்கி வருகிறார்.
எப்போதுமே சீனியர் நடிகர்களுக்கு இருக்கும் மரியாதையோடு பெரிய திரையிலிருந்து சின்னத்திரை என்கிற அனுபவங்களோடு மி ரட்டி வருகிறார் சபிதா. தூர்தசனில் ஔிபரப்பான கடல் புறத்தில் என்கிற சீரியலின் வாயிலாய் சின்னத்திரை பிரவேசம் அடைந்த சபிதா கோலங்கள் ராஜராஜேஸ்வரி சொர்க்கம் பெண் ஆகிய சீரியல்களில் நடித்து தனது திறமையை மீண்டும் வளர்த்துக் கொண்டார்.