அட 48 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபல முன்னணி நடிகர் பிரசாந்த்!! மணப்பெண் யார் தெரியுமா??

திரையரங்கம்

திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜனின் மகன் நடிகர் பிரசாந்த். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமின்றி ஆணழகன் திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்தது மட்டுமின்றி உண்மையாகவே ஆணழகன் என்று திரையுலகில் வர்ணிக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த்.

மேலும் இவருக்கு தற்போது 48 வயதாகும் நிலையில் இவர் இரண்டாம் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இன்றைக்கு அஜித் மற்றும் விஜய் அளவுக்கு பிரபலமாக வந்திருக்க வேண்டியவர் நடிகர் பிரசாந்த். குடும்ப வாழ்வில் இவருக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளால் இவரால் நடிப்பை தொடர முடியவில்லை.

இவரது மனைவி கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது தெரிய வந்ததை அடுத்து மனைவியை விவாகரத்து செய்த பிரசாந்த் அதன் பின் மனக் குழப்பங்கள் காரணமாக திரையுலகிலிருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது 48 வயதில் இருக்கும் நடிகர் பிரசாந்த் இரண்டாவது திருமணம் செய்ய போவதாகவும் உறவினர் பெண் ஒருவரை நிச்சயம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.