இந்த புகைப்படத்தில் சிரித்தபடி போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா? இன்று தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம்… யாருன்னு நீங்களே பாருங்க…!!

திரையரங்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி திரைப்பட நடிகையாகவும் பின்னணி குரல் கலைஞராகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை ரவீனா ரவி. மேலும் இவர் தமிழ், மலையாளம் போன்ற இரு மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

ஆரம்ப காலத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த சாட்டை திரைப்படத்தில் நடிகை மகிமைக்கு பின்னணி குரல் கலைஞராக பணியாற்றினார் நடிகை ரவீனா ரவி. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நிமிர்ந்து நில், கத்தி போன்ற திரைப்படங்களிலும் பின்னணி குரல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார்.

மேலும் அது மட்டுமில்லாமல் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளிவந்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரவீனா ரவி. அந்த வகையில் பாயும்புலி, காவல்துறை, உங்கள் நண்பன், ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம், அடங்கமறு போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஷால் நடித்து வெளிவந்த வீ ரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த அளவில் பிரபலமானார்.

மேலும் இதனை தொடர்ந்து இந்த காலகட்டத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் நடிகை ரவீனா ரவி தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரளாக பரவி வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published.