அந்தக்கால தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் 2003-ம் ஆண்டு “வசீகரா” திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளனியாகவும் பணியாற்றிய இவர்சன் தொலைக்காட்சியில் “நந்தினி” தொடரின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூபாடைவிங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார். இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீ படம் குறித்து பேசுகையில், ஸ்ரீ படத்தில் எனக்கு இயக்குனர் சொன்ன கதை ஒன்று.
ஆனால் படமாக்கியது ஒன்று. நான் அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவேன். என் வாழ்க்கையிலேயே நான் செய்த பெரிய மிகப்பெரிய தவறு ஸ்ரீ படத்தில் நடித்தது தான் என கூறியுள்ளார். சில ஆண்டுகள் தான் அதில் நடிகையாக நிலைத்திருக்க முடியும்.
மேலும் அதுவே ஒரு நிரந்தரமான ஒரு படிப்பும் தொழிலும் அமைந்து விட்டால் படங்களில் இருந்து வெளியே வந்த பிறகும் தன்னோடு தான் சுயமாக இருக்கலாம் என்பது இவரது நம்பிக்கை. தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.