இன்றைய கால தமிழ் சினிமாவில் பல விதாமான விமர்சனங்கள் பல நடிகர்கள் மீது எழுந்து வரும் இந்த நேரத்தில் சில முக்கியமான நடிகர்கள் மீது எளிதாக சில விமர்சனங்கள் எல்லாம் எழுந்து விடுகின்றன. இப்படி இளம் நடிகர்களை தாண்டி முன்னணி நடிகர்களே இது போன்ற பிரச்சனைகளில் சிக்கும் அளவிற்கு ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்
மேலும் அப்படி இருக்கும் வேளையில் இப்போது தமிழ் சினிமாவில் பல மொழி நடிகைகள் எல்லாம் நாயகியாக அறிமுகமாகி வருவது வழக்கமாக மாறி விட்டது. தமிழ் திரையுலகம் ஒரு பக்கம் இருக்க தெலுங்கு நடிகைகளும் தமிழ் சினிமாவில் பல விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். அப்படி தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் மிக பிரபலமாக இருந்து வந்தவர் அந்த இளம் நடிகை.
தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இவருக்கு தமிழில் பிரபல நடிகையாக ஒரு பிரபலமாக ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம். இதனால் அவர் தமிழில் சங்கத் தலைவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் இந்த படத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்து தனக்கு பேரும், புகழும் கிடைக்கும் என்று நடிகை ரொம்ப எதிர்பார்த்தாராம்.
ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறான விஷயம் நடிகை மிகவும் எதிர்பார்த்த அந்த படம் வந்த வேகத்திலே காணாமல் போய் விட்டது.இதன் காரணமாக தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நினைத்த அந்த நடிகைக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் நடிகை படக்குழுவினர் தன்னை ஏமாற்றி விட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
மேலும் படக்குழுவினர் படத்தைப் பற்றி ஓவர் பில்டப் கொடுத்து நடிகையை உசுப் பேற்றியது நடிகையின் புலம்பலுக்கு முக்கிய காரணமாம். படக்குழுவினரை நம்பிய நடிகை தற்போது படம் ஓடாத விரக்தியில் நொந்து போய் இருக்கிறாராம். இதன் காரணமாக இனிமேல் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் தான் நடிப்பேன் என்று நடிகை இருக்கிறாராம். அப்படிப்பட்ட கதையுடன் வரும் இயக்குனருக்காக நடிகை தற்போது காத்திருக்கிறார்.