பிரபல தொலைகாட்சி நிறுவனமான சன் டிவியில் தொகுப்பாளராக வீ ஜே மணிமேகலை பணியாற்றியுள்ளார். இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட்ஸ் என்ற நிகழ்ச்சியில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றினார். பின்பு பிராங்கா சொல்லட்டா என்னும் ஷோவையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் வீட்டில் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கூட இவர் தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டார்.
தற்போது திருமணம் முடிந்த பிறகும் கூட மணிமேகலை தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மணிமேகலை தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோ மாளி என்னும் ஷோ வில் பங்கேற்பாளராக இருக்கிறார்.
குக் வித் கோ மாளி நிகழ்ச்சி இந்த ரியாலிட்டி ஷோ இன்றளவும் தமிழ் மக்களால் பெரிதாக ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி எப்போதும் முடியவே கூடாது என்றும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதும் அனைத்து ரசிகர்களின் ஆசை. இரண்டாவது சீசன் முடிந்து எட்டு மாதம் முடிந்து விட்ட நிலையில் தற்போது சீசன் 3 சிறப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் கோமாளியாக அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கும் பிரபலங்களில் ஒருவராக மணிமேகலை இருந்து வருகிறார். இவரது காமெடி டிராக் தனியாகவே தெரியும். இவரது காமெடிகள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இவரது ரசிகர் ஒருவர் மணிமேகலை 11 வருடத்திற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது..