சமீபத்தில் நயன்தாராவிற்கும், பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் மிகவும் பிரபலமான கோவில் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது. அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கூட வெளிவந்தது. ஏற்கனவே தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று, பிரபல முன்னணி நடுங்கி நயன்தாரா கூறியுள்ள நிலையில், மீண்டும் எப்படி தற்போது இரண்டாவது நிச்சையாதார்தம் நடந்திருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதையெல்லாம் விட, நயன்தாரா நெற்றியில் திருமணமான பெண்கள் வைத்திருப்பதுபோல் நெற்றியின் நடுவில் குங்குமம் வைத்திருக்கிறார். இதனால், விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவிற்கும் தற்போது திருமணம் தான் நடந்துள்ளது என்று உறுதி செய்துள்ளார். இதற்கிடையில் ஏன் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மிகப்பெரிய கேள்வியும் எழும்பியுள்ளது.