தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள். இதைத் தொடர்ந்து, தாரை தப்பட்டை என்ற படத்தில் மிகவும் போல்டான கேரக்டரில் நடித்து அசத்தினார்.
அதன் பின்னர் இவர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் இவருக்கு வில்லி கதாபாத்திரம் மிகவும் சரியான கதாபாத்திரமாக மாறி விட்டது. இந்நிலையில், சண்டகோழி 2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வேற லெவலில் பேசப்பட்டார் நடிகை வரலட்சுமி. ஆரம்ப காலத்தில் கொஞ்சம் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த வரலட்சுமி உடல் எடை கூடி குண்டாக மாறி விட்டார்.
தற்போது உடல் எடையை குறைக்க குறைத்து ஆளே மாறிவிட்டார். தற்போதும் உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். மேலும் இந்த ஆண்டு மட்டும் அம்மணி கையில் 10 படங்கள் கையில் வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இவரது குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று இணையதளத்தில் அதிகளவு வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.