தென்னிந்திய சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே ஏராளமான புதுமுக நடிகைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. ஆரம்ப, காலகட்டங்களில் நடித்த சில நடிகைகள் இன்று சினிமாவை விட்டு விலகி உள்ளார்கள். அவர்கள் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும், குடும்ப சூழ்நிலையின் காரணத்தினாலும் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ரீமா சென்னும் ஒருவர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த பிரபல நடிகை ரீமா சென்.
இவர் முதலில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த, 2000 ஆம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபலமாகி விட்டார். அதன் பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும், தமிழ் திரையுலகில் தன் தேர்ந்த நடிப்பினால் முத்திரை பதித்தவர் நடிகை ரீமாசென். ஒரு காலத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. நடிகை ரீமாசென் அறிமுகமான மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடல் பயங்கர ஹிட் அடித்தது. அந்த பாடலை இன்றும் முணுமுணுக்காதவர்கள் இல்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த பாடல் பிரபலம்.
நடிகர் விஜய், விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் நடிகை ரீமாசென். இதனைத் தொடர்ந்து ரீமாவும், விஷாலும் சேர்ந்து நடித்த செல்லமே திரைப்படம் விஷாலுக்கும் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. நடிகர் சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தில் மிக அற்புதமான வி ல் ல த்தனமான நடிப்பால் ரசிகர்கள் இடம் பெற்றார்.
அதன் பிறகு நெகட்டிவ் ரோலிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார் நடிகை ரீமாசென். தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளிலும் நடித்திருக்கும் ரீமாசென். கடந்த, 2012ல் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இப்போது ருத்ரவீர் என்ற ஒரு மகனும் உள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரீமாசென் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அவருடைய 10வது வருட திருமண நாளை நடிகை ரீமாசென் கொண்டாடியுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் எடையை அதிகரித்து காணப்பட்டார். அந்த புகைப்படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் என்ன இப்படி குண்டாகி விட்டார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்…