16 வயதில் சினிமாவுக்கு வந்து ஐந்து படங்கள் மட்டுமே நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரம் கல்யாணியா இது..!! தற்போது கணவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கிய ரசிகர்கள்..!!

16 வயதில் சினிமாவுக்கு வந்து ஐந்து படங்கள் மட்டுமே நடித்து பிரபலமான குழந்தை நட்சத்திரம் கல்யாணியா இது..!! தற்போது கணவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கிய ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நபராக இருந்து வந்துள்ளனர். இருந்தாலும் கூட ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் தான் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர். இவரது உண்மையான பெயர் பூர்ணிதா. ஆனால், கலைத் துறைக்காக தனது பெயரை கல்யாணி என்று மாற்றிக் கொண்டார். இவர் 1990ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.  இவர் தனது 16 வயதிலேயே படங்களில் நடிக்க வந்து விட்டார்.

பிரபல நடிகரான பிரபுதேவா நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான அள்ளித் தந்த வானம் என்ற படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கல்யாணி. அந்த படத்தில் தனது சுட்டித் தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன் பின்னர் இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு என்று அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் துவங்கியது. அள்ளித் தந்த வானம் படத்திற்கு பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற படத்திலும் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் குருவம்மா, ரமணா, ஜெயம் போன்ற பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் கல்யாணி. ஒல்லியான தோற்றம், பார்ப்பதற்கு மிகவும் சின்னப்பெண் போல இருக்கும் முகம் என்பதால் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இருப்பினும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருப்பினும் குழந்தை நட்சத்திரமாக பார்த்த இவரை கதாநாயகியாக ஏற்றுக் கொள்ள மனது தமிழ் ரசிகர்களுக்கு வரவில்லை என்றே சொல்லலாம்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்த நடிகை கல்யாணி சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். 2001 ஆம் ஆண்டு வெளியான சாருலதா என்ற தொடரில் நடித்த கல்யாணி அதன் பின்னர் ராதிகா நடிப்பில், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அண்ணாமலை தொடரிலும் சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சொல்லப் போனால் சினிமாவை விட அண்ணாமலை சீரியலில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானார்.

தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வந்த கல்யாணி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வந்தார். இதுவரை பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் வெளியான இளம்புயல் என்ற படத்தில் நடித்தார் கல்யாணி. அதன் பின்னர் இவருக்கு சரியாக சினிமா வாய்ப்பு வராத காரணத்தினால் சின்னத்திரை பக்கம் தனது கவனத்தை கொண்டு வந்தார்.

கல்யாணி கடந்த 2013 ஆம் ஆண்டு ரோஹித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் ஒரு மருத்துவர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தொலைக்காட்சியில் பணியாற்றி வந்ததால் கல்யாணி சில காலம் குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கல்யாணி மற்றும் ரோஹித் தம்பதியினருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நவ்யா என்று பெயர் வைத்தார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது மகளின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் நடிகை கல்யாணி. அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் சின்னஞ் சிறு பெண்ணாக இருந்த கல்யாணி தற்போது குடும்பம் குட்டி என்று இப்படி குடும்பப் பெண்ணாக மாறி விட்டார் என்றும், இவரே ஒரு குழந்தை போல இருக்கிறார் இவருக்கு ஒரு குழந்தையா என்றும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.