தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்று பல புதுமுக நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமாவில் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பார்க்கும் பொழுது சினிமா துறையை விட சின்னத்திரையில் சீரியல் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு செல்கிறார்கள். அந்த வகையில் தற்போது அதிக ரசிகர்களை வைத்திருக்கக் கூடிய நடிகை யார் என்றால் மைனா நந்தினியைக் கூறலாம். மைனா நந்தினி அவர்கள் வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்க கூடிய நடிகை.
முதன் முதலில் நடிகை மைனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் நடித்தார். அதற்கடுத்த படியாக கலக்கப் போவது யாரு சீசன் 5ல் கலந்து கொண்டார். அடுத்த படியாக கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, சீசன் 3 டான்ஸ் ஜோடி டான்ஸ், நீலி என்னும் சீரியலிலும் நடித்து வேறு ஒரு தொலைக்காட்சியில் காமெடி கில்லாடிஸ் எனும் நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகவும் கலந்து கொண்டார்.
இப்படி அதிகமான சீரியல்களில் நடித்த மைனா நந்தினி சினிமாவிலும் அவருக்கான ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அப்படி அவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் என்றால் வம்சம் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்திற்கு கலைஞர் அவர்கள் கதை எழுதினார். இந்த திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்தில் கஞ்சா கருப்பு அவர்களுக்கு ஜோடியாக நடித்த மைனா நந்தினி அதிலிருந்து திரைப்பட பயணம் தொடங்கியது. சிவகார்த்திகேயன், விமல், சூரி இவர்கள் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த இரண்டு திரைப்படத்திலும் சரியாக அடையாளம் தெரியாத மைனா நந்தினி அதற்கு அடுத்தபடியாக டிவி சீரியல்கள் மூலமாக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
இறுதியாக இவர் மூன்று தொலைக்காட்சியில் சிறந்த நடிப்பை வெளிக்காட்ட சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் உருவானது எனலாம். அது மட்டுமல்லாமல் மைனா நந்தினி அவர்கள் முதன் முதலில் சரவணன் என்பவரை திருமணம் செய்தார்.
அவர்கள் இருவரின் வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டிருந்த பொழுது நடிகை மைனா நந்தினி கணவர் சரவணன் த ற் கொ லை செய்து கொண்டார். சினிமாவில் காலடி எடுத்து வைத்து விட்டு முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசையோடு வந்த மைனா நந்தினி வாழ்வில் இப்படி ஒரு சோ க ச ம்ப வ ம் நடந்தது. அதன் பின்பு ஒரு சில வருடங்கள் கழித்து யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன் பின்பு அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருக்கக் கூடிய நேரத்தில் மைனா நந்தினி தற்பொழுது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இப்படியிருக்க மைனா நந்தினி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவேற்றம் செய்திருக்கிறார். புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் மைனா நந்தினி அவர்களுக்கும் யோகேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.