தொகுப்பாளினி அர்ச்சனாவை தெரியாதவர்களே இல்லை எனலாம். பிக் பாஸ் அபியுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு தொகுப்பாளினி அர்ச்சனா அவர்களின் நட்புறவு குறித்த ஒரு ரகசியத்தினை வெளியிட்டுள்ளார். அர்ச்சனா எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதே போல இவர் யூடுடுயூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அர்ச்சனா பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது. அது என்ன புகைப்படம் என்னவென்றால், அர்ச்சனா, பிக் பாஸ் பிரபலமாகிய அபிநய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இவர் என்னுடைய பள்ளி வகுப்பு தோழன். நாங்கள் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்படி இவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் என்று சொல்லலாம். இதுவரை அர்ச்சனா இந்த விஷயத்தை சொன்னதே கிடையாது. முதல் முறையாக அர்ச்சனா அபிநய் உடன் இருக்கும் முதல் புகைப்படத்தை பதிவிட்டு இதைப் பற்றி சொல்லி இருக்கிறார். மேலும், அபிநய் மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
அது மட்டுமில்லாமல் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநய் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதற்குப் பின் தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சமீபத்தில் தான் அபிநய் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.