தென்னிந்திய சினிமா உலகில் புதுமுக நடிகைகள் மற்ற மொழிகளில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றார்கள். ஆனால், அவர்கள் எல்லோராலும் அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக முடியவில்லை. ஆரம்ப கால கட்டங்களில் நடித்த ஒரு சில நடிகைகள் இன்று சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்களது நடிப்பும் அவர்கள் பேசிய வசனங்களும் இன்றும் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் உன்னை தேடி. இந்தத் திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகை மாளவிகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மாளவிகா ரோஜா வனம், திருட்டு பயலே, குருவி, சபரி, வெற்றிக்கொடி கட்டு, சந்திரமுகி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மாளவிகா நடனமாடிய “வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்” என்ற பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது என்று கூட சொல்லலாம். அதன் பிறகு தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாளவிகா திகழ்ந்து வந்தார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து 10 வருடங்களுக்கு முன் சுமேஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகி விட்டார். தற்போது மாளவிகாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் மும்பையில் தான வசித்து வந்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தயாராகி உள்ளதாக கூறியுள்ளார்.
இது பற்றிய தகவல்கள் வெளியாகி அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை மாளவிகா தனது பள்ளி வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்தப் புகைப்படத்தை பார்த்த பலரும் இது நடிகை மாளவிகாவா என்று ஆ ச்சரியத்தில் உள்ளார்கள். மேலும், அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணைய தளங்களில் வை ரலாக்கி வருகின்றார்கள்…