நடிகர் சத்யராஜ் நடிக்க ஆரம்பித்த காலம் முதல் இந்த காலம் வரை நடிகர் சத்யராஜுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. அவர் தமிழ் சினிமாவில் அதிக அளவில் தோன்றினார். இவரது 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நண்பன், ராஜா ராணி, பாகுபலி, பாகுபலி 2 மற்றும் கனா ஆகிய சமீபத்திய திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பாராட்டுகளையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜுக்கு 67 வயது ஆகின்றது. இருந்தாலும் இன்று வரை சினிமாத்துறையில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்பொழுது நடிகர் பிரபாஸுடன் இணைந்து ராதே ஷியாம் என்ற திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளப்பக்கத்தில் இவரின் மகள் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மகளிர் தினம் என்பதால் அம்மாவைப் பற்றி நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். மேலும் சத்யராஜ் அவரது மனைவியுடன் இருக்கும் இளம் வயது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.