இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ராதிகா, நைனிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தெறி. இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் தனது மிரட்டலான நடிப்பில் அசத்தி இருப்பார். பிரபல நடிகை ராதிகா விஜய்க்கு அம்மாவாக நடித்திருப்பார்.
விஜய்க்கு ஜோடியாக சமந்தாவும், முக்கியமான ஒரு வேடத்தில் நடிகை எமி ஜாக்சனும் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் வெற்றிக்கு மேலும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு தான்.
தனது அழகான நடிப்பாலும், பேச்சாலும் படம் பார்க்கும் அனைவரையும் மிகவும் ஈர்த்திருப்பார் பேபி நைனிகா. படத்தில் முதலில் விஜய், சமந்தாவுக்கு கை குழந்தையாக ஒரு பெண் குழந்தை நடித்திருக்கும். விஜய், சமந்தா, அந்த குழந்தை மூவரும் வரும் பாடல் இந்தப் படத்தில் மிகவும் பிரபலமானது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் அந்த பாடலில் மிகவும் சிறு குழந்தையாக வரும் அந்த பெண் குழந்தை தற்போது நன்கு வளர்ந்து விட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதோ அந்தப் புகைப்படம்…