தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சரத்குமார். இவருக்கு பாடி பில்டர் என்ற பெயரும் கூட உண்டு. தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார் என்பதும் நமக்குத் தெரிந்த விஷயம் தான். சமீபத்தில் சரத்குமார் பற்றிய ஒரு செய்தி வெளியானது. அது என்னவென்றால் நடிகர் சரத்குமார் அந்த காலத்தில் மூன்று நடிகைகளுக்கு மேல் காதலித்து திரிந்தார் என பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.
சரத்குமார் பல படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் முதலில் அவர் அறிமுகமானது வி ல் ல னாகத்தான். வி ல் லனாக பல படங்களில் நடித்து அதன் பின்னரே கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் முடித்திருந்த சரத்குமார் தனது முதல் மனைவியை வி வாகர த்து செய்து விட்டுத்தான் ராதிகாவை திருமணம் செய்தார்.
ஆனால் ராதிகாவுக்கு முன்னரே சரத்குமார் காதல் செய்தது தேவயாணியைத்தான் எனும் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சரத்குமார் தேவயானியுடன் மூவேந்தர் என்ற படத்தில் நடிக்கும் போது அவரை விரும்பினார். மேலும் அந்த காதல் கைகூடாததால்தான் ராதிகாவை திருமணம் முடித்ததாக தெரிகிறது.
தேவயானியை காதல் செய்தது மட்டுமல்லாமல் அவரது வீட்டிற்கு சென்று பொண்ணு கேட்டுள்ளார் சரத்குமார். ஆனால் பெண் தரமாட்டேன் என்று சொல்லி அவரை அனுப்பி விட்டாராம் தேவயானியின் தாயார். அதுமட்டுமல்லாமல் நடிகை ஹீராவையும் காதலித்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.