40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமா துறையில் கால் பதித்த அன்றிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் பல கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறார். ஒரு சில நடிகைகள் பல படங்களில் கூட நடித்திருக்கின்றனர். ஆனால் ஒரு படத்தில் கூட நடிக்காத நடிகை யார் என்றால் அது நடிகை தேவயாணி தான். அதற்கான காரணத்தை அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இப்பவும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு மகளாக, அம்மாவாக, அக்காவாக, தங்கையாக ஒரே நடிகையே நடித்த வரலாறும் உண்டு. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் அவருக்கே ஜோடியான நடிகைகளும் தமிழ் சினிமாவில் உண்டு. முன்னணி நடிகராக இருக்கும் அவருடன் படம் நடிக்க அனைவருமே ஆர்வமாகத்தான் இருப்பார்கள்.
அந்த வகையில் 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வலம் வந்தவர் தேவயானி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவருக்கு அந்த காலகட்டத்தில் ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர் அழகில் மயங்காதவர்களே இ ல்லை எனலாம். சினிமாவில் மட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் அனைத்து தாய்மார்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர்.
அப்படிப்பட்ட தேவயானி ரஜினியுடன் கடந்த 27 வருடமாக நடிக்கவில்லை அதற்கான காரணத்தை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ரஜினியுடன் நடிப்பதற்கு தகுந்த கதாபாத்திரங்கள் கொண்ட கதை தனக்கு அமையாதது தான் காரணம் என கூறியுள்ளார். மேலும் ரஜினியின் எந்த ஒரு படக் கதைக்கும் தான் தேவைப்படவில்லை போல எனவும் தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
இருந்தாலும் கூட வருங்காலத்தில் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ரஜினியுடன் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக தான் நடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தேவயானி தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.