வாரத்தில் 7 நாட்கள் இருந்தாலும் வெள்ளிக்கிழமை என்பது தெய்வங்களுள் மகாலட்சுமி தேவிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் பெண்களும் சரி ஆண்களும் சரி பலரும் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெற பல்வேறு பூஜைகளை செய்வார்கள். இதனால் வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் செல்வம் சேரும். அதோடு வறுமை நீங்கி கடன் பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் உள்ளது.
சாஸ்திரத்தில், வறுமை நீங்கி செல்வத்தை பெறுவதற்கான சில எளிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை யார் ஒருவர் நம்பிக்கையுடன் தவறாமல் பின்பற்றினாலும், அவருக்கு செல்வம் தொடர்பான அனைத்து சி க் க ல்களும் விலகும்.
உங்களுக்கு பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கிறதா..? அப்படியென்றால் வெள்ளிக்கிழமைகளில் பின்வரும் விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் மகாலட்சுமி தேவி உங்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.
முதலில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை கழுவி சுத்தம் செய்து தலைக்கு குளிக்க வேண்டும். பிறகு வெள்ளிக்கிழமை அன்று செல்வம் பெருகுவதற்கு, லட்சுமி தேவி படத்திற்கு முன் இரண்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் பணம் அதிகம் சேரும். வறுமை நீங்கும்.
வெள்ளிக்கிழமை நாளில் பூஜை அறையில் உள்ள லட்சுமி தேவிக்கு நல்ல வாசம் வீசும் மல்லிகைப் பூவை வைத்து வழிபட்டு வந்தால், லட்சுமி தேவியின் முழு அருளைப் பெறலாம்.
மஹாலட்சுமியானவள் தாமரை பூவில் வாசம் செய்பவள். எனவே வெள்ளிக்கிழமை அன்று தாமரை மலரால் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. லட்சுமி தேவிக்கு வாசனை நிறைந்த பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு நல்ல வாசனை மிக்க சந்தனத்தைப் படைப்பதன் மூலம், அதிர்ஷ்டம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று லட்சுமி தேவிக்கு எட்டுவிதமான எண்ணெயால் காலையும், மாலையும் தீபம் ஏற்றி தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். ஏனெனில் இம்மாதிரி தீபம் ஏற்றி வழிபாடு செய்வது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். இதனால் லட்சுமி தேவியின் மனம் குளிர்ந்து, முழு ஆசீர்வாதத்தையும் பெறலாம்.
வெள்ளிக்கிழமை அன்று எப்போது வீட்டை விட்டு வெளியே சென்றாலும் சந்தன நறுமணம் கொண்ட வாசனை திரவியங்களை பயன்படுத்தினால், வேலை மற்றும் வணிகத்தில் இரட்டிப்பு முன்னேற்றத்தைக் காணலாம். இலாபம் பெருகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோமாதாவாகிய பசு மாட்டிற்கு வைக்கோல் மற்றும் வெல்லத்தைக் கொடுப்பது நல்லது. இதனால் லட்சுமி தேவியின் பரிபூரண அருள் உங்களுடைய முழு குடும்பத்திற்கும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை நாளன்று ஒரு சிறிய தேங்காயை சுத்தம் செய்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி, வீட்டு சமையலறையின் கிழக்கு மூலையில் கட்டித் தொங்க விடுங்கள். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் உணவு மற்றும் பணத்திற்கு ஒருபோதும் குறையே இருக்காது.