தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மட்டுமில்லாமல் இன்னும் பல மொழிகளில் இசையமைப்பாளராக இன்றுவரை கலக்கி வருபவர் தான் டி.இமான். தமிழன் படம் மூலம் முதன் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 100 படங்களுக்கு மேலும் இசையமைத்துள்ளார். தேசிய திரைப்பட விருதையும் இவர் வென்றுள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம்செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ஆனால் இவரது குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக அவரே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நமக்கு வந்த தகவல் என்னவென்றால் டி.இமான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம். அது வேறுயாருமில்லையாம் சென்னையை சேர்ந்த உமா என்பவரை தான் மறுமணம் செய்ய போகிறார் என்று நமக்கு தகவல் கிடைத்துள்ளது.