தமிழ் சினிமாவின் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என்று கூறலாம். ஏனென்றால் சிவாஜி, எம் ஜி ஆர் காலத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும்தான் தற்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவின் கதாநாயகர்களாக நடித்து வருபவர்கள். இவர்களின் கீழ்தான் தமிழ் சினிமாவே இயங்கி வருகிறது என்று கூடக் கூறலாம்.
அந்த வகையில் இவ்விரு உச்ச நடிகர்களின் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் முன்னணி நடிகையான கௌதமி அவர்கள். நடிகை கௌதமி தமிழ் சினிமாவின் பிரபலமான கதாநாயகிகளுள் முக்கியமான நாயகியாக நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ராஜா சின்ன ரோஜா, பணக்காரன் போன்ற திரைப்படங்களில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
அந்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகத்தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கமலஹாசன் அவர்களுடன் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தேவர்மகன், நம்மவர் , பாபநாசம் என பல மாபெரும் வெற்றித் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த காளத்தி இருந்து இருவரும் காதலித்து வந்தார்கள் என்று கி சுகி சுக்கள் எல்லாம் சினிமாவின் உலாவிக் கொண்டிருந்தது.
ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் இருவரும் சினிமாவில் மட்டுமே அவர்களது கவனத்தை செலுத்தி வந்தார்கள். நடிகை கவுதமி ஆந்திர மாநிலத்திலுள்ள கோதாவரி என்ற மாவட்டத்தைச் சார்ந்தவர். இவர் 1998 ஆம் ஆண்டு சந்திப்பாரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்பு சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று மன உறுதியுடன் இருந்தார்.
பின்னர் இந்த தம்பதிகளுக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் பிறந்தார். திருமணமாகி முதல் வருடத்திலேயே அதாவது மே 1999. அடுத்த வருடமே கணவருடன் வாழ விரும்பவில்லை என்று விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதற்கு அடுத்தபடியாக 2005 ஆம் ஆண்டிலிருந்து கமல்ஹாசன் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.