பாலிவுட் சினிமாவில் எந்த காட்சி என்றாலும் அதற்கான சம்பளம் போதுமானதாக இருந்தாலே போதும் அதற்கு ஓகே என்று நடித்து கொடுக்கும் நட்சத்திரங்கள் அங்கு மிகவும் அதிகம். அப்படி ஒரே படத்தில் ஹாட்டாக நடித்த இளம் நடிகைகள் கூட முன்னணி நடிகையாக இன்று கொடிக்கட்டி பறக்கிறார்கள்.
இது நடிகர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் வருண் தவான் படத்தின் கதைக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என்று பல போல்ட் காட்சிகளில் நடித்துகொண்டிருக்கிறார். அப்படி 2020ல் வருண் தவான் நடிப்பில் வெளியான படம் தான் கூலி நம்பர் 1.
அப்படத்தில் வருண் நர்ஸ் கதாபாத்திர காட்சிகளில் இவர் மிகவும் கட்சிதமாக நடித்திருப்பார். அதற்காக பெண் வேடமிட்டு நடிகை சாரா அலிகானுடன் அவர் எடுத்த புகைப்படத்தைப் வெளியிட்டுள்ளார். இதில் யார் பிரிட்டி என்று பதிவிட்ட வருணுக்கு இந்திய நட்சத்திரங்கள் பலரும் கிண்டலடித்து தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.