சினிமா திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவரானவர் தான் முரளி. இதயம் முரளி என்று சொன்னாலே தமிழ் மக்களின் மனதில் தோன்றும் நடிகர் என்றால் அது நடிகர் முரளி தான். அந்த காலத்தில் பல நடிகர்கள் இருந்தாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து வந்த ஒரு பிரபலமான நடிகர் ஆவார். இதனைத் தொடர்ந்து நடிகர் முரளி அந்த காலத்தில் நடித்த படங்களில் பல வகையான படங்கள் மக்கள் மனதில் இருந்து அப்போதிலிருந்து தற்போது வரை நீங்கவில்லை என்பது தான் உண்மை.
இப்படிப்பட்ட நடிகர் முரளி சினிமாவில் பூவிலங்கு என்ற திரைப்படத்தில் நடித்து தான் முதலில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. நடிகர் முரளி தனது சினிமா வாழ்க்கையில் வெற்றி அடைந்ததை தாண்டி சொந்த வாழ்க்கையிலும் ஷோபா என்ற பெண்ணை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.
நடிகர் முரளிக்கு ஒரு மகன் மட்டும் தான் இருக்கிறார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அது அதர்வா என்று தற்போது வரைக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மொத்தமாக நடிகர் முரளிக்கு மூன்று வாரிசுகள் இருக்கிறார்கள். முரளி மனைவி சோபாவிற்கு அதர்வா மற்றும் ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவியா என்ற ஒரு மகளும் இருக்கிறார். அதர்வா மட்டும் தற்போது தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.