2 மாத கர்ப்பமாக இருந்த போதும் பி ஜே பியின் பிரச்சாரத்திற்காக சென்ற பிரபல நடிகை..!! கடைசியாக தொலைபேசியில் அவர் பேசியது என்ன தெரியுமா...? க ண் ணீர் விட்டு க த றி அ ழும் பிரபலம்...!!

2 மாத கர்ப்பமாக இருந்த போதும் பி ஜே பியின் பிரச்சாரத்திற்காக சென்ற பிரபல நடிகை..!! கடைசியாக தொலைபேசியில் அவர் பேசியது என்ன தெரியுமா…? க ண் ணீர் விட்டு க த றி அ ழும் பிரபலம்…!!

திரையரங்கம்

நடிகை சௌந்தர்யாவின் முதல் படத்தின் இயக்குனர் ஆர் வி உதயகுமார். அதனால் அவரை சௌந்தர்யா தன் உடன் பிறந்த சகோதரர் ஸ்தானத்தில் வைத்திருந்தாராம். நடிகை சௌந்தர்யா தமிழில் நவரச நாயகன் கார்த்திக்குடன் சேர்ந்து பொன்னுமணி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியவர் ஆர் வி உதயகுமார் தான். பொன்னுமணி படத்தில் ஒரு சில காட்சிகளை சௌந்தர்யாவை வைத்து சூட் செய்த பின் அதனை ப்ரிவியூ தியேட்டர் ஒன்றில் ஆச்சி மனோரமா, சிவகுமார் மற்றும் படத்தின் இயக்குனர் ஆர் வி உதயகுமார் மூவரும் சேர்ந்து பார்த்தார்களாம்.

பொன்னுமணி படத்தில் சௌந்தர்யா நடித்த காட்சிகளை பார்த்த சிவக்குமார் மற்றும் ஆச்சி மனோரமா இருவரும் சௌந்தர்யாவை பாராட்டினார்களாம். அதுமட்டுமல்லாமல் ஆச்சி மனோரமா அவர்கள் சௌந்தர்யாவின் நடிப்பைப் பார்த்து விட்டு கண்டிப்பாக இவள் அடுத்த சாவித்திரியாக சினிமாவில் வலம் வரப் போகிறாள் என்று இயக்குனரிடம் கூறினாராம். ஆச்சி சொன்னது போலவே சௌந்தர்யா பொன்னுமணி படம் ரிலீசுக்கு பிறகு ஏகப்பட்ட தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.

தெலுங்கு படங்களில் பிசியாக இருந்த சௌந்தர்யாவிடம் அருணாச்சலம் என்ற ரஜினி படத்திற்கு கால்ஷீட் தரும்படி கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் படுபிஸியாக இருந்த சௌந்தர்யா அந்த படத்திற்கு முதலில் கால்ஷீட் கொடுக்கவில்லை. அதன்பின் பொன்னுமணி படத்தின் இயக்குனரான ஆர் வி உதயகுமார் ரஜினி சார் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா..? அவரே கால் பண்ணி உன்னிடம் கால்சீட் கேட்பதற்கு முன் நீயே கொடுத்துவிடு என்று பாசத்துடன் உரிமையாக கூறினாராம்.

உதயகுமார் அவர்களின் பேச்சை மீறாத சௌந்தர்யா உடனே ரஜினி படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்தாராம். சௌந்தர்யா படங்களில் நடித்து தன்னுடைய திறமையால் சொந்தமாக ஒரு மாபெரும் வீட்டைக் கட்டினாராம். அந்த வீட்டைக் கட்டிய பிறகு தன் முதல் பட இயக்குனரான உதயகுமார் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதுமனை புகுவிழாவில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பு கோரிக்கை ஒன்றை வைத்தாராம். ஆனால் அவரோ வேலைப்பளு அதிகமானதால் நேரமின்மை காரணத்தால் போகவில்லையாம்.

தமிழில் ரஜினியுடன் அவர் நடித்த அருணாச்சலம் படம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து ரஜினிக்கு இவர் தான் சரியான ஜோடி என்று ரசிகர்கள் அனைவராலும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமலுடன் காதலா காதலா என்ற படம் நடித்தார். அதனை முடித்தவுடன் மறுபடியும் ரஜினியுடன் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் படையப்பா என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து தவசி மற்றும் சொக்கத்தங்கம் போன்ற படங்களில் நடித்திருந்தார் சௌந்தர்யா. கன்னடத்தில் பி வாசு இயக்கத்தில் அப்த மித்ரா என்ற படத்தில் நடித்தாராம். இந்தப் படம் தான் தமிழில் சந்திரமுகியாக வெளியானது. ஆனால் இந்தப் படத்தில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படத்தில் நடித்து முடித்த பிறகு தன் முதல் பட இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அண்ணா இது தான் என்னுடைய கடைசி எல்லாம் முடிய போகுது என்று கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பேசிய சௌந்தர்யா தான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியை கேட்ட ஆர் வி உதயகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து இருவரும் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடி உள்ளனர்.

அப்பொழுது நாளை பிஜேபி கட்சி பிரச்சாரத்துக்கு செல்ல உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். முதல் நாள் மாலை தொலைபேசியில் பேசிய சௌந்தர்யா அடுத்த நாள் காலை உ யி ர் இழ ந்து விட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் பெரும் அ தி ர் ச்சி அடைந்தாராம் பொன்னுமணி படத்தின் இயக்குனர் ஆர் வி உதயகுமார்.

பிஜேபி கட்சியின் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்ட சௌந்தர்யா தி டீரெ ன்று ஹெலிகாப்டர்  வெ டித் துச் சிதறிய ச ம்பவத்தில்  உ யி ரி ழ ந்தார். சௌந்தர்யா வீட்டின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத ஆர் வி உதயகுமார் முதல் முதலாக அவரது இ ற ப்பி ற் கு தான் சௌந்தர்யாவின் வீட்டிற்குச் சென்றாராம்.

அப்போதுதான் அவரது வீட்டில் பார்த்தாராம் சௌந்தர்யா தன் முதல் பட இயக்குனரை எப்போதும் மறக்கக்கூடாது என்பதற்காக உதயகுமார் அவர்களின் பெரிய புகைப்படம் ஒன்றை  சுவற்றில் மாட்டி வைத்திருந்தாராம். மனம் நொ ந்து போன உதயகுமார் அந்த நேரம் கண் க லங்கி நின்றாராம். நடிகையாக யார் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் நடிகையான பிறகும் கூட தன்னை தூ க்கி விட்டவர்களை மறக்காமல் இருக்கும் குணம் சௌந்தர்யாவிடம் இருந்துள்ளது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.