காந்தக் கண்ணழகி என்றாலே அது நடிகை மீனாதான். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக முதலில் அறிமுகமாகி, அதன்பின் கதாநாயகியாக நடிக்கத் துவங்கியவர் நடிகை மீனா. இவர் தமிழில் முதன் முதலில் வெளிவந்த ஒரு புதிய கதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து இவரது நடிப்புத் திறமையினால் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், பிரபு, அஜித் என பல நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடிக்கத் துவங்கினார். இவர் நடித்த படங்கள் அதிக பட்சம் வெற்றியாகத் தான் இருக்கும். அதிலும் இவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த எஜமான், வீரா, முத்து போன்ற படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றன.
நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளார். நைனிகாவை தெறி படத்தில் விஜயுடன் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால், மீனாவின் கணவர் வித்யாசாகரை பலரும் பார்த்ததில்லை.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களிலும் கதாநாயகியாக நடித்திருப்பார். இவர் சரளமாக ஆறு மொழிகள் பேசியதால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் செய்திருப்பார்.
இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து நடிகை மீனா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. புகைப்படத்தைப் பார்த்து இவர்தான் அவருடைய கணவரா என ஆச்சர்யத்தில் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…