பித்தப்பையில கல் இருந்தா இந்த 5 வகை உணவுகளை சாப்பிடவே கூடாது! ஏன் தெரியுமா?

ஆரோக்கியம்

இயற்கை சார்ந்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் அவசியம். அந்த வகையில் எந்த வகை உணவுகள் நம் பித்தப்பை கற்களை கரைக்க உதவுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.நம் கல்லீரலுக்கு அருகில் இருக்கும் பித்தப்பையில் கற்கள் உருவாகிறது. அப்படி உருவாகும் போது தீராத வலி ஏற்படும். இந்த பித்தப்பை கற்களை கரைக்க மருந்து மாத்திரைகளை எடுப்பதை விட இயற்கையான உணவுகள்இதற்கு அதிகமாக உதவுகிறது.

பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதால் அடிவயிற்றில் வலி, வயிற்று வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுகின்றன. இந்த பித்தப்பை கற்களை சில எளிதான உணவுகளால் தடுக்கலாம்.

பித்தப்பை:
நம் உடலில் கல்லீரலுக்கு அருகில் உள்ள பேரிக்காய் வடிவமுள்ள சிறிய உறுப்பு பித்தத்தை சேகரித்து செய்து வருகிறது. மேலும் இந்த உறுப்பு முக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் இவை சில நேரத்தில் பித்தப்பை கற்களை உருவாக்கலாம்.

மேலும் இதற்கு உடல் பருமன் ஒரு பெரிய ஆபத்தாக இருக்கிறது. உடல் எடையை குறைப்பது பித்தப்பை கற்களில் இருந்து நம்மை நாம் பாதுக்காத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி பித்தப்பை கற்களை வெளியேற்ற நம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

​கார்போஹைட்ரேட் உணவுகள்:

நம் உடலில் இருக்கும் பித்தப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. மேலும் இவை ஜீரணிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

​பக்கோரா போன்ற வறுத்த உணவுகள்:

இது போன்ற வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை பித்தப்பை கற்களை உருவாக்குகிறது.

​பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் கொழுப்புகள் அதிகளவில் உள்ளன. பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் இருக்க இந்த மாதிரியான உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

​சிவப்பு இறைச்சி:

சிவப்பு இறைச்சிகளை சாப்பிடுவதால் நம் உடலில் இது போன்ற உணவுகள் ஜீரணிப்பதற்கு கடினமாக இருக்கும். ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

​பால் பொருட்கள்:

பால் சம்மந்தமான பொருட்களை உண்ணுவதால் பிரச்சனை ஏற்படும். பாலினால் கற்கள் உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உண்ணலாம்.

Leave a Reply

Your email address will not be published.