post office plan

நீங்க மாதம் ரூ.1411 கட்டினால் போதும்.. ரூ.35 லட்சம் பெறலாம்.. அஞ்சலகத்தின் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை பாருங்க..!

வீடியோ

அணைத்து வகையான காப்பீடுகளும் நமக்கு நிச்சயம் ஒரு பயனுள்ள திட்டம் ஆகும் அதிலும் கிராமப்புற மக்களை இலக்காக கொண்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என்பது ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் நகர்புற மக்களும் விரும்பி முதலீடு செய்யும் முதலீட்டு திட்டங்களாக அஞ்சலக திட்டங்கள் உள்ளன.இந்தியாவினை பொறுத்தவரையில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் நடுத்தர மக்கள் நிலையான வருமானம் தரக்கூடிய, பாதுகாப்பு முதலீட்டு திட்டங்களாக அஞ்சலக திட்டங்களாக பார்க்கப்படுகின்றன.

சொல்லப்போனால் நடுத்தர மக்களின் முதலீட்டு போர்ட்போலியோவில் அஞ்சலக திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலகத்தில் கிராம சுரக்ஷா திட்டம் பற்றித் தான். இதில் இரண்டு திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI).இந்த திட்டங்களில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இணைந்து கொள்ளலாம்.

யார் எதனை எடுக்கலாம்? அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்கள், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் இணையலாம். இரண்டாவது திட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் அனைவரும் இந்த பாலிசியினை பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.

அதிகபட்ச காப்பீடு பொதுவாக இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளில் இருந்து, குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கிறது. இது கூடுதலாக வரிச்சலுகையுடன் கிடைக்கும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை10 லட்சம் ரூபாய் ஆகும்.

போனஸ் சலுகை பொதுவாக அஞ்சலக திட்டங்களில் பெரும்பாலான திட்டங்களில் கடன் வசதி உண்டு. இந்த இன்சூரன்ஸ் திட்டத்திலும் 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. அதேபோல இந்த இன்சூரன்ஸ் திட்டத்தினை 3 வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம். எனினும் 5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் சலுகை கிடைக்காது.

ரூ. 35 லட்சம் எப்படி சாத்தியம்? இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்த சில விருப்பங்கள் உண்டு. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகளாகும்.

ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும். இதே 58 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும். அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.

இந்த அஞ்சலக திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும். இதே 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும். 60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.