வெள்ளை வெங்காயத்தில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

வெள்ளை வெங்காயத்தில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

ஆரோக்கியம்

கோடை காலங்களில் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் குறைகிறது மற்றும் வியர்வையை கட்டுப்படுத்துகிறது. வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டிரியாக்களை அளிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம். வெள்ளை வெங்காயம் தினம் தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகப்படுத்துகிறது.

இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது. உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என ஆய்வுகள் சொல்கின்றன.

வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்ககள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கவும் வெள்ளை வெங்காயம் உதவுகிறது. வெள்ளை வெங்காயத்துடன் சம அளவு வெள்ளரிக்காய் சேர்த்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளை சதை குறையும்.

Leave a Reply

Your email address will not be published.