கிராம்புகள் நல்ல செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கிறது. உணவுடன் சேர்க்கும்போது, அவை அமிலத் தன்மையை தடுக்க உதவுகின்றன. கிராம்புகள் உமிழ்நீர் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. கிராம்பை மெல்வது சித்த அல்லது ஆயுர்வேத சிகிச்சையாக பரிந்துரைக்கபடுகிறது. இரவில் தான் பலருக்கும் பல்வலி பாடாய் படுத்தும்.
அந்த சமயத்தில் 2 கிராம்புகளை பல்வலி ஏற்பட்ட இடத்தில் வைத்தால் உடனே வலி குறையும். உணவு சாப்பிடும் போது உங்கள் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். இது மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி உருவாக்கும். நாம் எல்லோரும் ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த பிரச்சினையை சந்தித்திருப்போம். நாம் சாப்பிடும் உணவு உணவுக்குழாய் வழியாக வயிற்றுப்பகுதிக்கு செல்கிறது.
வயிற்றில் உள்ள இரைப்பை சுரப்பிகள் உணவை ஜீரணிக்க தேவையான அமிலத்தை/ அசிடிட்டியை உருவாக்குகின்றன. இரைப்பை செரிமானத்திற்குத் தேவையானதை விட அதிகமான அமிலத்தை உற்பத்தி செய்யும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது. மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள் இருந்தால் அது வயிற்றுப் பொருமல் என்பதைப் புரிந்து கொண்டு, உடனே 2 கிராம்பை எடுத்து வாயில போட்டுக்கோங்க. தினமும் இரவில் இரண்டு கிராம்புகளை வாயில் போட்டு மென்றால் தீவிர மற்றும் நீண்ட கால அசிடிட்டி என்னும் வயிற்றுப் பொருமல் பிரச்சனைக்கு அது சிறந்த தீர்வாக இருக்கும்.