ம ரணத்தையே கூட ஒரு கை பார்ப்போம் வா என அழைக்கும் க ருஞ்சீரகம் ! அப்படி என்னதான் செய்யும் இது? வாங்க பார்ப்போம் ..!!

ஆரோக்கியம்

நம் வீட்டில் அனைவரும் பயன்படுத்தும் சமையல் அறை பொருட்கள் தீராத வியாதிகளைக் கூட தீர்க்கும் குணம் படைத்தவை. அவற்றை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமையால்தான் அதன் மகத்துவம் பற்றி நமக்கு இன்னும் தெரியாமல் இருக்கிறது. அந்தக் காலத்தில் பாட்டி வைத்தியம் என்று கூறி, அங்கிருக்கும் ஏதேனும் ஒரு பொருளை எடுத்து, அல்லது இரண்டு , மூன்று பொருட்களை எடுத்து கலந்து தான் வைத்தியம் செய்தார்கள். அதில் மஞ்சள் பெயர் போனவை. ஒரு நல்ல கிருமி நாசினியாக அது செயல்பட்டது. அதுபோலவே மிளகு. இதுவும் உடல் நலனை எந்த குறையும் இல்லாமல் பாதுகாக்கும் உணவுப் பொருள்தான்.

இதனால்தான் உணவில் அன்றாடம் இதுபோன்ற பொருட்களை சிறிதளவு சேர்த்து சமைக்கிறோம். அந்த வகையில் உடல் நலனை பேணி காத்து, போன உயிரை திரும்ப கொண்டு வரும் வரம் படைத்ததுதான் கருஞ்சீரகம். இது என்னென பிரச்னைகளை தீர்க்கிறது என்று தெரிந்துகொள்வோமா

சளி, இருமலை போக்க கூடியதும், தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.

கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்.சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.

Leave a Reply

Your email address will not be published.