கண்பு ரை நோ ய் கு ணமாக இந்த 3 பொருள் போதும், கண் பார்வை ம ங்கல், கண் அ ழுத்த நோ ய் குணமாகும்..!! வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று இந்த கண்புரை. இது கண்களில் உள்ள கருவிழியில் வெள்ளைப்படலம் போல தோன்றும். இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்’ என்பர். கண்களில் உள்ள லென்ஸ்,கண்களில் புரை ஏற்படுவதினால் கருவிழி ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது
ஆங்கிலத்தில் இதன் பெயரான காட்ராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது pearl eyed என்றும் அழைக்கப்படுகிறது.
கண்களில் இருக்கும் இரண்டு முக்கியமான பொருட்கள் தண்ணீர் மற்றும் ப்ரோட்டீன். வயாதாகும் போதோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ ப்ரோட்டீன் கருவிழியில் படரத் துவங்குகிறது, காலப்போக்கில் அவை கருவிழியை முழுதாக மூடிவிடும். முக்கியமாக வயதானவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கும் அதைத் தவிர வேறு என்ன காரணங்கள் உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.