பெண்களில் பலருக்கு தலைமுடி நீளமாக இருந்தாலும் அதிகம் வறண்டு இருப்பது போல் உணர்வார்கள். அதற்காக கவலைப்பட வேண்டாம். நம் வீட்டு சமையலறையில் உள்ள 2 பொருளை வைத்தே தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம்.
அது வேறொன்றும் இல்லை முட்டை மற்றும் விளக்கெண்ணெய் தான். இவை இரண்டுமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைக் கொண்டவையாகும்.
இனி எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
நன்கு கலந்ததும் அதை தலைமுடியில் தடவி 1-2 மணிநேரம் ஊற வைக்கவும்.பின் மைல்டு ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
இதனால் விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும், முட்டையில் உள்ள புரோட்டின், தலைமுடியை வலிமையாக்கும்.வாரத்திற்கு இரண்டு முறையாவது இப்படி செய்தால் நல்ல ஒரு மாற்றத்தினை உணரலாம். நீங்கள் இதை முயற்சி செய்யலாம் நிச்சய பலன் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.