உங்களுக்கு அடிக்கடி கால்வலி வருகிறதா? ஏன்? உங்க இரத்த ஓட்டத்தை கண்காணிங்க…!

ஆரோக்கியம்

வணக்கம் நண்பர்களே,நம் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றுக்குமே அவை செயல்படும் ஆற்றல் இருந்தால் மட்டுமே, மொத்த உடலாலும் சீராகவும், சுறுசுறுப்பாகவும் இயங்க முடியும். இந்த உடல் உறுப்புகளுக்கு தேவையான எனர்ஜி அதாவது ஆற்றலானது ரத்தத்தின் மூலமே கிடைக்கிறது.

உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான ஊட்டச்சத்து, ஆக்சிஜன் ஆகியவற்றை ரத்தம் சரியாக வழங்காதபோது தான் உடலில் பிரச்னைகள் தோன்றுகின்றன. உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்னை, நரம்பு வீக்கம் போன்ற நோய்களுக்கும் ஆளாக நேரிடும். இதற்கெல்லாம் அடிப்படையாக உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

ரத்தம் ஓட்டம் மாற்றம் ஏற்பட்டால் குளிர் காய்ச்சலும் ஏற்படக்கூடும். சிலருக்கு கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும். இதுபோன்ற பிரச்னைக்கு முக்கிய காரணமே நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது தான். இதேபோல் சத்தான உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதும் இப்பிரச்னைக்கு வழிவகுக்கும்.

புகை, மதுப்பழக்கம், அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் ஆகியவையும் நமது உடலில் ரத்த ஓட்டம் குறைய அடிப்படைக் காரணம். உணவு அலற்சி, அனீமியா எனப்படும் இரத்தசோகை, நரம்பு கோளாறுகள், ஒபிசிட்டி, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, கொலஸ்டிரால், சர்க்கரை நோய் ஆகியவையும் நம் உடலில் ரத்த ஓட்ட பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

அதன் பின்னர் அதிக அறிகுறி தெரிவது கால்களில் தான். கால் மரத்துப் போதல், கால்வலி ஆகியவை உண்டாகும். இதனால் கால்கள் வலுவிலக்கும். இது அதிகமாகும்பட்சத்தில் உங்கள் எடையைத் தாங்கும் சக்தியை கால் இழந்துவிடும். கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, பூண்டு, இஞ்சி, க்ரீன் டீ, தேங்காய் எண்ணெய், மிளகு, மஞ்சள், கோதுமை, மாதுளை, பீட்ரூட், கற்றாழை, நன்னார் ஜீஸ் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் இப்பிரச்னை வராது.

Leave a Reply

Your email address will not be published.