நம்ம தமிழ்த்திரையுலகில் ஹீரோ, ஹீரோயின்களைத் தாண்டி சிலர் குணச்சித்திரப் பாத்திரத்தால் கவனிக்க வைப்பார்கள். அப்படி ஒருவர் தான் என்.எஸ்.லெட்சுமி. ஏராளமான படங்களில் குணசித்திரப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ‘வானத்தைப் போல’ படத்தில் என்.எஸ்.லெட்சுமியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.பல நடிகர் நடிகைகள் பல்வேறு திருமணம் செய்யும் நிலையில் இவர் கடைசி வரை திருமணம் செய்யவில்லை காரணம் இதோ..
சின்ன வயதிலேயே தாயை இழந்த லெட்சுமி, வீட்டில் 11வது குழந்தை. சிறுவயதிலேயே கோயிலில் வேலைசெய்த லெட்சுமியை அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நடன கலைஞர் ஒருவர் நடன குழுவில் சேர உதவினார். அங்கு இருந்துதான் திரைத்துறைக்கு வந்தார். 1960 களில் உச்சநட்சத்திரமாக இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், லெட்சுமியின் திறமையைப் பார்த்துவிட்டு தனது படங்கள், நாடகங்களில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.
நடிகர் நாகேஷ், லெட்சுமிக்காக இயக்குனர் பாலச்சந்தரிடம் பரிந்துரைந்தார். தேவர் மகன் படம் தான் லெட்சுமிக்கு திருப்புமுனை. அதில் அவரது நடிப்பைப் பார்த்துவிட்டு கமல் தனது பல படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, தென்றல் சீரியலிலும் நடித்தார்.
ஆனாலும் லெட்சுமி கடைசிவரை கல்யாணம் செய்துகொள்ள வில்லை. தன் அண்ணன் மகன்களையே தனது பிள்ளைகளாக நினைத்தார். அவர்களும் தங்கள் அத்தையை கண்ணும், கருத்துமாக பார்த்து கொண்டனர். கடந்த 2012ம் ஆண்டு, பிப்ரவரியில் இறந்தார் லெட்சுமி. குணச்சித்திர நடிகையாக கோலோச்சிய அவர் கடைசிவரை திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்தது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.