ஒரே ஒரு நாளில் உலகம் fullaa டிரெண்டிங்! யார் இந்த அன்னபூரணி அம்மா? வீடியோ வைரல்..!!

செய்திகள்

உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன, இந்த போஸ்டர் சமூகவலைதளங்களிலும் வைரலானது.

ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அவருக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகின.

இந்த நிகழ்வு வைரலானவுடன் இன்னொரு வீடியோவும் வைரலானது. அதாவது அன்னபூரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்தவர்.

மற்றொரு பெண்ணின் கணவருடன் சட்டவிரோதமாக அன்னபூரணி வாழ்ந்து வந்ததாக அவரது மனைவி புகாரின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி 1ஆம் திகதி அன்னபூரணி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த மாவட்ட பொலிசார் திருமண மண்டப உரிமையாளரை எச்சரித்து அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

அதையும் மீறி அனுமதித்தால் உரிமையாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என எச்சரித்துள்ளனர். மேலும் அன்னபூரணி சாமியாரை பொலிசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அன்னபூரணி பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், என்னை தனிப்பட்ட உடலாக பார்ப்பதால் தான் நான் இதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தேன், நான் யார் என்றெல்லாம் கேட்க நினைக்கிறீர்கள்.

நான் தான் சொல்கிறேனே, இங்கு சக்தியாக இருக்கிறேன் என்று, என்னை சாதாரணமாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள் (ஆக்ரோஷமாக கத்தி பேசுகிறார்). நான் கோபப்படவில்லை, உங்களுக்கு புரியவில்லை.

இது உணரக்கூடிய விடயம். நான் என்ன செய்கிறேன் என்பதை உணர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும். என்னை பொலிசார் தேடுகிறார்கள் என்பதெல்லாம் பொய், நான் தலைமறைவாக எல்லாம் இல்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.