கடும் உழைப்பின் எதிரொலியாக வருகிற முதுகுவலி, மனச்சோர்வை விரட்ட ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ள நவீன சிகிச்சை..!!

ஆரோக்கியம்

சுறுசுறுப்பான உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள் ஜப்பானியர்கள். அப்படி கால நேரம் பாராமல் உழைப்பதால் வருகிற பிரச்சினைகளைக் கையாள்வதிலும் அவர்கள் ஸ்மார்ட்டாகவே விளங்குகிறார்கள் என்பதற்கான உதாரணம் தான் ஒட்டோனா மக்கி.

அது என்ன ஒட்டோனா மக்கி?

கடும் உழைப்பின் எதிரொலியாக வருகிற முதுகுவலி, மனச்சோர்வை விரட்ட ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ள நவீன சிகிச்சைதான் ஒட்டோனா
மக்கி (Otona Maki). இந்த சிகிச்சை முறையில்,சுவாசிப்பதற்கு ஏதுவான மெல்லிய துணியால் உடல் முழுவதையும் மூடிவிடுகிறார்கள்.

தாயின் வயிற்றுக்குள் குழந்தை அமைதியாக இருப்பதைப் போல இந்த துணிக்குள் கை, கால்களை மடக்கி 20 நிமிடங்கள் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும்.இப்படி படுத்துக்கொள்வதன் மூலம் முதுகுவலி, மனச்சோர்வுகள் நீங்கி பச்சிளம் குழந்தைக்கு கிடைக்கும் உணர்வு கிடைப்பதாக இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தாயின் கருவறைக்குள் குழந்தை உருப்பெறும் போது கை, கால்களை மடக்கிய நிலையில்தான் இருக்கும். அதேபோல் ஒரு துணிக்குள் கட்டி வைப்பதால்தான் பச்சிளம் குழந்தை போன்ற உணர்வு உண்டாகிறதோ என்னவோ!என்னவாக இருந்தாலும், இந்த முறையை செய்ய சிலர் தயங்கினால், யோகா நிபுணர்களிடம் அல்லது டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது மிக நல்லது.

Leave a Reply

Your email address will not be published.